இல்லம் - வீடியோ - பிடிவாதம் பாட வீடியோ

பிடிவாதம் பாட வீடியோ
ஆசிரியர்: ஜான் பெவியர்

கடினமான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள். அது எதுவென்று உங்களுக்குத் தெரியும். நின்று, தளர்ந்து, துரதிருஷ்டமான சூழலில் பிழைக்க போராடுகின்றீர்கள். பிழைக்க வேண்டியதை மட்டும் செய்கின்றீர்கள்.

இந்த சோதனைகளெல்லாம் உங்களது வாழ்வை மாற்றக்கூடிய திறன் கொண்டதென்றால் எப்படியிருக்கும்? நீங்கள் சந்திக்கும் கடினமான சூழ்நிலை விசுவாசம் மற்றும் முதிர்ச்சியின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்றால் எப்படியிருக்கும்? பிழைக்க அல்ல கடினமான சூழ்நிலையை மேற்கொள்ள நீங்கள் அமைக்கப்பட்டிருந்தால் எப்படியிருக்கும்?

பிடிவாதம் ழூலமாக உங்களது திறனை வெளிப்படுத்தும் பிரயாணத்தில் கொண்டுச் செல்ல ஜான்பெவியர் விரும்புகின்றார். வேதாகம மற்றும் நடப்பு மனிதர்களை நினைவுறுத்தி, வல்லமையான மாதிரியைக் கொடுக்கின்றார். இந்த வலிமையான ஆண்கள் மற்றும் பெண்கள், நிலைத்து நின்று பிழைக்க மற்றும் மட்டும் போராடவில்லை. அவர்கள் கடினமான சூழ்நிலையை நேருக்கு நேராக எத்pர்த்து, நோக்குவார்கள்.

கர்த்தருடைய வார்த்தையினாலும், வல்லமையான ஜெபத்தினாலும் திடப்படுத்தி, உபத்திரவத்தினைக் குறித்து வாழ்வை மாற்றும் உண்மைகளை வெளிப்படுத்துவீர்கள். கர்த்தருடைய பிள்ளையாக, கடினமான சூழ்நிலையை பெலமாக மாற்றி, நன்றாக முடிக்க எது வேண்டுமோ அதனைப் பெறுவீர்கள்

Share