சரியான மொழி: ta தமிழ்

மொழி
Selected Language:

இல்லம் - புத்தகங்கள் - கிரிப்டோனைட்டை கொல்லுதல்

கிரிப்டோனைட்டை கொல்லுதல்
ஆசிரியர்: ஜான் பெவியர்
கிடைக்கின்றது:

உங்கள் பெலத்தை திருடுபவைகளை நீங்கள் அழிக்க முடியும்.

எந்தத் தடையையும் தாண்டி, எந்த எதிரியையும் தோற்கடிக்கும் சூப்பர்மேனைப் போலவே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கும், நாம் முகம் கொடுக்கும் எல்லா சவால்களையும் மேற்கொள்ளக்கூடிய இயற்கைக்கப்பாற்பட்ட திறன் உள்ளது. ஆனால் சூப்பர்மேனுக்கும் நமக்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால் நம் பெலத்தைத் திருடக்கூடிய கிரிப்டோனைட் என்ற ஒன்று காணப்படுகின்றது.

சூப்பர்மேனும் கிரிப்டோனைட்டும் கற்பனை பாத்திரங்கள் என்பது உண்மைதான். ஆனால் ஆவிக்குரிய கிரிப்டோனைட் அப்படிப்பட்டதல்ல.

இந்தப் புத்தகம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட தெய்வீக பெலத்தை நம்மில் பலரால் இன்று ஏன் அனுபவிக்க முடியவில்லை என்னும் கேள்விக்கான பதில்களை தருகின்றது.

கிரிப்டோனைட்டை கொல்லுதல் என்னும் இப்புத்தகத்தில் ஜான் பெவியர் கிரிப்டோனைட் என்பது எதைக் குறிக்கின்றது, அது ஏன் நம் சமுதாயங்களுடன் சமரசம் பண்ணிக் கொள்கின்றது மற்றும் இந்தக் கட்டிலிருந்து நாம் எவ்வாறு விடுதலையடைவது என்பதனை பற்றி விளக்குகின்றார்.

இது இருதய பெலவீனமுள்ளவர்களுக்கானதல்ல, கிரிப்டோனைட்டை கொல்லுதல் ஆவிக்குரியவைகளால் செறிவூட்டப்பட்ட ஒன்றேயல்லாமல் வேறொன்றுமல்ல. சவால்கள் நிறைந்த பாதையில், ஆனால் அந்த சவால்கள் மூலம் வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் மறுமலர்ச்சியின் பாதையை தெரிந்து கொள்ள ஏங்குகின்ற, கிறிஸ்துவைப் பின்பற்றும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் இது மிக முக்கியமான ஒரு சத்தியமாகும்.

பதிவிறக்கம் (~3.19 MB)

Share