சரியான மொழி: ta தமிழ்

மொழி
Selected Language:

இல்லம் - புத்தகங்கள் - நித்தியத்தினால் உந்தப்பட்டு புத்தகம்

நித்தியத்தினால் உந்தப்பட்டு புத்தகம்
ஆசிரியர்: ஜான் பெவியர்
கிடைக்கின்றது:

பூமியில் உள்ள வாழ்வு புகை போன்றது. எனினும் இதன் மறு கரையில் ஒன்றும் இல்லை என்பது போன்றே நம்மில் அனேகர் வாழுகின்றனர். ஆனால் நாம் இந்த வாழ்வை எப்படி வாழுகின்றோம் என்பது தான் நாம் நித்தியத்தை எப்படி அனுபவிப்போம் என்பதைத் தீர்மானிக்கும். ஒருவர் சாதித்தது எல்லாம் நியாயத்தீர்ப்பில் அழிவதைக் காண்பதில் இருந்து, கிறிஸ்துவுடன் இணைந்து ஆளுகை செய்வதைக் காண்பது என்பது போன்ற பல விதமான ஈவுகள் இருக்கின்றன என்று வேதாகமம் நமக்குக் கூறுகின்றது.

2 கொரிந்தியர் 5:9-11 இன் நெறிமுறைகளின் அடிப்படையில், ஒவ்வொரு விசுவாசியும் தங்களுடைய வாழ்வில் எதனைச் சம்பாதித்தார்களோ அதனைப் பெற்றுக் கொள்ள கிறிஸ்துவின் முன்பாக நிற்பார்கள் என்று ஜான் பெவியர் நினைவுப்படுத்துகின்றார். நித்திய ஈவைப் பெற்றுக் கொடுக்காத அனேக காரியங்களில் நமது அதிகமான நேரத்தைச் செலவளித்ததை அறிந்து நம்மில் பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைவார்கள்.

ஆகவே சிறப்பான வாழ்வை எப்படி மேம்படுத்துவது? நித்தியத்தினால் உந்தப்பட்டு என்னும் இந்த புத்தகத்தில், உங்களது அழைப்பை நீங்கள் கண்டறிந்து, உங்களுக்கு என்று கர்த்தர் கொடுத்திருப்பதை பெருக்கிக் கொள்ள கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் நித்திய கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, நீடித்து இருப்பதற்காக உழைக்க திறன் மேம்படுத்தப்படுவீர்கள்.

பதிவிறக்கம் (~2.31 MB)

Share