சரியான மொழி: ta தமிழ்

மொழி
Selected Language:

இல்லம் - இதைக்குறித்து

கிளவுட் நூலகத்தினை குறித்து

இடம் மற்றும் பணம் ஒரு பொருட்டில்லாமல், அனைத்து போதகர்;களுக்கும்,தலைவர்களுக்கும் இந்த பாடத்திட்டம் கிடைத்திட வேண்டுமென்று உலகளாவிய அர்ப்பணிப்புள்ள நோக்கம் மெசெஞ்ஜர் இன்டர்நேஷனலுக்கு உண்டு. கிளவுட் நூலகம் இந்த நோக்கத்துடனே உருவாக்கப்பட்டது. இது மொழிபெயர்க்கப்பட்ட பாடத்திட்டம் இலவசமாகக் கிடைக்கவும், பதிவிறக்கம் செய்யப்படும் சர்வதேச தளமாக இது உள்ளது.

உலகின் மக்கள் தொகையில் 90 சதவீத மக்களை சென்றடையக் கூடிய அளவில் இந்தப் பாடத்திட்டமானது ஒவ்வொரு முக்கியமான மொழியிலும் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதனை நிறைவேற்ற கிளவுட் நூலகம் ஒரு தளம். ஏன் என்று கேட்கின்றீர்களா? காரணம் இணையதள பாடத்திட்டமானது சாதாரண பாடத்திட்டத்தினை விட வேகமாகப் பரவக்கூடும். நீங்களும் இதனை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறீர்கள் என நம்பகிறேன்.

படைப்பாளர்களிடமிருந்து

இயேசுவானவர் பிரசங்கிக்க மட்டும் அல்ல, சீஷர்களை உருவாக்கவும் கட்டளையிட்டார். இந்த செய்திகள் நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக மாற உதவும். உங்களுக்குப் பயிற்சியளிப்பதில் முதலீடு செய்கின்றோம். காரணம் உங்களையும் உங்களது ஆளுகையில் உள்ள உலகை மாற்றவே பெருந்கிறனை கர்த்தர் உங்களுக்குள் வைத்துள்ளார். அவர் உங்களை அதிகமாக அறிய விரும்பகின்றார். இந்தப் பாடத்திட்டமானது கர்த்தரோடு நெருங்கிய தனிப்பட்ட உறவினை அறிந்து கொள்ள உதவும் கிறிஸ்துவில் உள்ள உறவில் நீங்கள் வளரும் போது, அவரது வார்த்தையின் வல்லமையினால் மறுரூபமாக்கப்படுவீர்கள்.

உங்களது தாலந்து மற்றும் ஆளுகைக்கு ஏற்ப ஒரு நோக்கத்துடன் கர்த்தர் உங்களைப் படைத்துள்ளார். உங்களுக்கு என்று கர்த்தர் கொண்டுள்ள பரிபுரணத்தை தேட உங்களை உற்;சாகப்படுத்துகின்றேன். இதனைக் கண்டுபடிப்பதில் மேம்படுத்தட்டும் என்பதே என் ஜெபம்.

உங்களுக்கான ஆசீர்வாதங்கள்,

ஜான் மற்றும் லிசா பெவியர்

தரிசனத்தை ஆதரியுங்கள்

உலகமெங்கும் வாழ்வை மறுரூபப்படுத்தும் இந்தப் பாடத்திட்டம் கொடுக்கப்பட வேண்டுமென்ற வைராக்கியம் இருதயத்தில் எரிகின்றதா? கிளவுட் நூலக ஊழியத்தினை ஆதரிக்க விரும்பினால் getinvolved@cloudlibrary.org என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும். ஊங்களது ஜெபத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி.